இதனைத் தொடர்ந்து ஆறுமுககுமாரின் இயக்கத்தில் 'Ace' என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தன. இந்தத் திரைப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதற்கு முன் ஆறுமுககுமார்,விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்தின் First Look மற்றும் Title Teaser என்பன சில மாதங்களுக்கு முன் வெளியாகின.
இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் திரைப்படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.