நாம் அன்றாட உணவில் பல மரக்கறி வகைகளைப் பயன்படுத்தி வருகிறோம். அதில் அதிக ஊட்டச்சத்து மிக்கது கரட். பார்வையை மேம்படுத்துவது முதல் நோயெதிர்ப்புச் செயற்பாட்டை அதிகரிப்பது வரை கரட் முக்கிய பங்கு வகிக்கிறது.
கரட்டில் beta carotene மற்றும் ஒக்ஸிஜனேற்றங்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஊட்டச்சத்து நிறைந்த உணவின் ஒரு பகுதியாக உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும். இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் எடையைக் குறைக்க உதவுகிறது.
புற்று நோயாளிகளுக்கு chemotherapy கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கரட் ஜுஸ் குடிப்பது நல்லது.