அஜித், த்ரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
இதுவரை இந்தத் திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் Teaser மற்றும் First single இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் இந்த மாத இறுதியில் இத்திரைப்படத்தின் Trailer வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மலையாள சினிமாவில் துணை வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்ற நடிகர் Shine Tom Chacko இந்தத் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.