மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜோன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, பிபாஷா, வடிவேலு, தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சச்சின்’.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது.
இதேவேளை இத்திரைப்படத்தை ஏப்ரல் 18 ஆம் திகதி மறு வெளியீடு செய்யவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு அறிவித்துள்ளார். ஏற்கனவே விஜய்யின் 'கில்லி' திரைப்படமும் திரையிடப்பட்டு இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றிருந்தது.