பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் 'தக் லைஃப்' (Thug Life).
இத்திரைப்படத்திற்கு A. R. ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தை Madras Talkies, Raaj Kamal Flims International மற்றும் Red Giant Movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வீடியோ ஒன்றை திரைப்படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் First Single விரைவில் வெளியாகும் என திரைப்படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இப்பாடலின் வரிகளை உலகநாயகன் கமல்ஹாசன் எழுதியுள்ளார்.