மக்காச்சோளம் உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியமாகும்.
தானிய வகைகளில் ஒன்றான மக்காச்சோளத்தினை உண்பதால் , நாம் பல்வேறு நன்மைகளை அடையலாம்.
சோளத்தில் எண்ணற்ற மருத்துவப் பலன்கள் அடங்கியுள்ளது.
மக்காச்சோளத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிற்றுப் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
மக்காச்சோளத்தின் மாவினை உட்கொள்வதால், உடல் பலவீனம் நீங்கி நல்ல பலம் பெறும்.
அத்துடன், மூளை வளர்ச்சியையும் , நரம்பு மண்டலங்களையும் நன்கு செயல்படவைக்கிறது.
கெட்ட கொழுப்புகளை நீக்கி, உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.
எலும்புகளை வலுவாக வைக்கவும் உதவுகிறது. சோளம் குறைந்த அளவு கொழுப்பினைக் கொண்டது.
இது இதய ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களும் வராமல் இருக்க உதவி புரிகிறது.
மக்காச்சோளமாவுடன் வெல்லம் சேர்த்துச் சத்துமாவாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
சோளத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால், இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதத்தன்மை காக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
மக்காச்சோளம் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது.
அத்துடன், இதில் நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்துக்களைக் கொண்டுள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்த்து, உணவு செரிமானமாவதற்கு உதவி புரிகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த சோளத்தை உண்டு ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.