சுவையான, ஆரோக்கியமான இயற்கை பானங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இளநீரில் இருக்கும் மருத்துவ நன்மைகள் ஏராளம்.
குளுமையும் தித்திப்பும் நிறைந்த இளநீரில் சோடியம், கல்சியம், குளுகோஸ், புரதம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுப்பதுடன், சருமப் பாதிப்புகளையும் தடுக்கின்றது. இளநீர் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். மேலும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படுவதுடன் நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். இளநீர் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. ஒரு டம்ளர் இளநீரில் 48 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே இதனை அதிகமாகக் குடித்தாலும், நாம் உள்கொள்ளும் கலோரிகள் அதிகரிக்காது.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் குடிப்பது நன்மை பயக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ரோலை அதிகரிக்க உதவுகிறது என்பதால் இதய செயல்பாட்டிற்கு மிகவும் நன்மை பயக்கும்.