ஹ்ரித்திக் ரோஷனின் மிகப்பிரபலமான சூப்பர் ஹீரோ திரைப்படமான 'க்ரிஷ்' திரைப்பட வரிசையில் நான்காம் பாகமான
'க்ரிஷ் 4' திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2006 ஆம் ஆண்டு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் அவரது தந்தையான ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியானது 'க்ரிஷ் ' திரைப்படம். இந்தத்திரைப்படத்தின் வெற்றியையைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் மூன்று பாகங்களும் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதேவேளை 'க்ரிஷ்' திரைப்படத்தின் 4 ஆம் பாகத்திற்கான கேள்வி இருந்து வந்தது.
இந்நிலையில்தான் 'க்ரிஷ் ' திரைப்படத்தின் 4 ஆம் பாகத்தை ஹ்ரித்திக் ரோஷன் நடித்து இயக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதைப் பணிகள் முடிவடைந்துள்ளதுடன் படப்பிடிப்புப் பணிகள் அடுத்தாண்டு ஆரம்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.