வர்ஷா பரத் இயக்கத்தில் வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் " Bad Girl ".
இத்திரைப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
த்ரிவேடி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் Teaser ஐ படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இத்திரைப்படம் ஒரு Teenage பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் மற்றும் அவள் எப்படி இந்த உலகத்தைப் பார்க்கிறாள் என்பதை சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" என்ற பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை கேபர் வாசுகி எழுதியுள்ளார். மாளவிகா மனோஜ் பாடியுள்ளார்.
அண்மையில், ,ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இத்திரைப்படம் வென்றது.
இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.