தமிழில் 'மாஸ்டர், கைதி, விக்ரம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தற்பொழுது அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கும் 'Once More'என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக இயக்குநர் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார்.
ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.
கடந்த மாதம் 14 ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்தத் திரைப்படம் திரையில் வெளியானது.
இந்தத் திரைப்படத்தில் இருந்து 'வா கண்ணம்மா' என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.இந்நிலையில் திரைப்படத்தின் அடுத்த பாடலான 'எதிரா புதிரா' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.