உடல் பருமன் உங்கள் உடல் தோற்றத்தை பாதிப்பதோடு, பல்வேறு உடல் நல அபாயங்களையும் ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் சில நேரங்களில் மாரடைப்பைக் கூட உடல் பருமன் ஏற்படுத்த வாய்ப்புண்டு .
நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும், நம்பிக்கையான தோற்றத்தைக் கொண்டிருக்கவும், உடல் எடையை நிர்வகிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.அதற்கு முதலில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆரோக்கியமான எடையை பராமரிக்க வழக்கமான உடல் செயற்பாடு அவசியம்.உங்கள் அன்றாட செயல்களில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் தினசரி உடற்பயிற்சியை செய்து கொள்வது ஆரோக்கியமானதாகும்.
ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஏனெனில், நீங்கள் சாப்பிடும்போது சாப்பிடும் அளவு குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
அப்படி கவனமாக இருக்கும்போது, உடலின் பசி மற்றும் முழுமையான உணர்வுகளின் மீது கவனம் செலுத்தலாம்.
ஆரோக்கியமான எடையை பராமரிப்பதில் உங்கள் தூக்கத்தின் தரம் முக்கிய பங்கு வகிக்கிறது.தூக்கமின்மை காரணமாக உங்கள் ஹோர்மோன் அளவை சீர்குலைத்து, ஆரோக்கியமற்ற பசியை அதிகரிக்கும்.
உங்கள் எடை இழப்பு இலக்குகளை அமைக்க ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணிநேர தூக்கத்தைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் எடை மேலாண்மைக்கு முக்கியமானது.
அது மட்டுமல்லாமல் மன அழுத்தம் ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்புக்குப் பங்களிக்கும்.ஆரோக்கியமான எடையை பராமரிக்க, சீரான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நீங்கள் எடுக்கும் சிறிய மாற்றங்கள் நாளடைவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.எனவே இந்தப் பழக்கங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.