கடந்த 2022 ஆம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சர்தார்'. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
முதலில் இத்திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சாம் சி.எஸ் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று மதியம் திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாக உள்ள நிலையில்,தற்போது இந்தத் திரைப்படத்தின் First Look ஐ திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.