இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் நடிகர் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மேலும், இத்திரைப்படத்தில் அஜித்குமாருடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'OG SAMBAVAM' பாடல் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து 2ஆவது பாடலான 'God Bless U' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்படி, ஏப்ரல் 3 ஆம் திகதி 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.