பழங்களில் வாழைப்பழங்கள் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தாலும், நம்மில் பலர் அதிலுள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைப் புரிந்துகொள்ளாமல், அதனை சாதாரணமாக நினைக்கிறோம்.
7000 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பயிரிடப்பட்டு, உலகில் மிக அதிகமாகப் பயிரிடப்படும் பழமாகவும் கோதுமை, நெல், சோளம் இவற்றிற்குப் பிறகு நான்காவதாக மிக அதிகமாகப் பயிரிடப்படும் விளைபொருளாகவும் வாழை உள்ளது.
வாழைப்பழத்தில் Vitamin A, B, B2, C மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. உணவை எளிதில் சமிபாடடையச் செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. மேலும், உடலில் இரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும். அடிக்கடி வாழைப்பழத்தைச் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. மேலும் குடல் புண்களால் பாதிக்கப்பட்டவர்கள்
விரைவில் குணமாகலாம்.
வாழைப்பழத்தில் Serotonin என்ற முக்கியமான Hormone (இரத்தத்தில் உள்ள முக்கிய
உட்சுரப்பி நீர்) உள்ளது. இது நமது நல்வாழ்விற்கும் சந்தோஷத்திற்கும் தேவையான மனநிலை மற்றும் உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.