இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்திருக்கும் திரைப்படம் ''குட் பேட் அக்லி''.
இந்தத் திரைப்படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் இம்மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் முன்பதிவு வியாழக்கிழமை 08.02 மணிக்கு தமிழ்நாடு முழுக்க தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் Trailer ஐ படக்குழு வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது.
இதுவரை இந்த Trailer ஐ YouTube இல் 60 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.