ஜஸ்பிரித் பும்ரா IPL தொடரில் விளையாடுவதற்கு BCCI மருத்துவக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் பும்ரா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் பயிற்சி செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில் பும்ரா பங்கேற்கவில்லை.
தற்போது BCCI மருத்துவ குழு அவருக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் இடம் பெறுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.