ஹொலிவுட் இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த Action திரைப்படங்களின் வரிசையில் 'Mission Impossible' திரைப்படங்களுக்குத் தனி இடம் உள்ளது. புகழ்பெற்ற ஹொலிவுட் நடிகரான Tom Cruise நடிப்பில் வெளிவந்த அனைத்து 'Mission Impossible' திரைப்படப் பாகங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன.
கடந்த 2023ஆம் ஆண்டு Mission Impossibleஇன் 7ஆவது பாகம் வெளியானதையடுத்து, இதன் 8ஆவது பாகமும் தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது இதன் Trailarஇனை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.
'Mission: Impossible – The Final Reckoning' என்ற தலைப்பில் நேற்றைய தினம் இத் திரைப்படத்தின் Trailarஇனை நடிகர் Tom Cruiseஉம் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தினரும் வெளியிட்டுள்ளனர்.
வழமை போலவே இத் திரைப்படத்தில் Tom Cruiseஇன் அதிரடி Action காட்சிகள் சிறப்பாகவுள்ளதால் இரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
'Mission:Impossible – The Final Reckoning' திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.