சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' திரைப்படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக நடிகர் அருண் விஜயின் நடிப்பில் `ரெட்ட தல' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இதானி நடித்துள்ளார்.மேலும் இத்திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து, டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன.இந்நிலையில் 'ரெட்ட தல' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை 'என்ற இத்திரைப்படத்தில் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.