மீன்கள் என்றாலே நலன் தரக்கூடியது என்றாலும், ஒவ்வொரு மீனிலும், பல நன்மைகள் உண்டு. அதிலும் அரிதாகக் கிடைக்ககூடிய மீன்கள் என்றால், அதைக் கட்டாயம் வாங்கி உணவில் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள். அப்படிப்பட்ட மீன்தான் இந்தக் கொடுவா மீன்.
கொடுவா மீனில் உள்ள மக்னீசியம்,கல்சியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் உடம்பில் உள்ள எலும்பு மற்றும் தசையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
கொடுவா மீனில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் எண்ணெய்த் தன்மை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி சருமத்தை இளமையாக வைக்க உதவும்.
இந்த மீனில் உள்ள விற்றமின் E பார்வைத் திறனை அதிகரித்து கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
மற்றும் கொடுவா மீனில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள், புரதச்சத்துக்கள், விற்றமின்கள் இந்தக் கொடுவா மீனில் நிறைந்து இருப்பதால், வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ரோலின் அளவைக் குறைக்க கொடுவா மீனை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.