சுந்தர் C , வடிவேலு ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'. சுந்தர் C இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'கேங்கர்ஸ்' திரைப்படம் இம்மாதம் 24ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் Trailer ஐ படக்குழு அண்மையில் வெளியிட்டிருந்தது. மேலும் வடிவேலு இத்திரைப்படத்தில் பல தோற்றங்களில் நடித்துள்ளமையினால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான 'குப்பன்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.