பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் Cholesterol பிரச்சினை முதல் வயது முதிர்வு போன்ற தோற்றத்தையும் நீக்கி இளமையோடு இருக்க உதவும்.
பாதாமில் கல்சியம் அதிகம் இருக்கிறது. அத்தோடு புற்றுநோயை எதிர்க்கும் விட்டமின்களும் பாதாமில் உள்ளது.
உடலில் ஓடும் இரத்தம் சீரான முறையில் இருக்க இரத்தத்தில் சரியான விதத்தில் அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டும். இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை பெருக்கும் சக்தி பாதாம் பருப்புக்கு அதிகம் உள்ளது.
பாதாம் பருப்பில் இயற்கையான பல இரசாயனங்கள் உள்ளன. இவை எமது சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
பாதாம் பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் விட்டமின் சத்துகள் நிறைந்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலிலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலைத் தருகிறது.
பாதாம் பருப்புகளைத் தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம்.
இவ்வாறான நன்மைகளைக் கொண்ட பாதாம் பருப்புகளை உட்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.