ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியில் 246 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு பதிலளித்தாடிய ஹைதராபாத் அணி 18 .3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக துடுப்பெடுத்தாடி சதம் பெற்று சாதனை படைத்தார். அவர் 55 பந்துகளில் 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்த நிலையில் தோல்வி தொடர்பாக பேசிய பஞ்சாப் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், உண்மையைச் சொன்னால் இது ஒரு அற்புதமான ஸ்கோர் என்று நினைக்கிறேன். இன்னும் 2 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் அவர்கள் எங்கள் இலக்கை கடந்தது எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது.
நாங்கள் சில பிடிகளை எடுத்திருக்கலாம். நாங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பந்து வீசவில்லை, இவை நாங்கள் முன்னோக்கிச் செல்வதற்குக் கற்றுக்கொண்ட பாடங்கள். நானும், வதேராவும் 230 ஒரு நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம், ஆனால் பனிப் பொழிவு எங்களுக்கு (இரண்டாவது இன்னிங்ஸின் போது) அதை கடினமாக்கியது என்று நினைக்கிறேன். அபிஷேக் ஷர்மாவின் இன்னிங்ஸ் நான் பார்த்த சிறந்த இன்னிங்சில் ஒன்றாகும். என அவர் தெரிவித்துள்ளார்.