ஒருநாள் போட்டிகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
அண்மையில் நடைபெற்ற ICC குழுக் கூட்டத்தில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் செய்ய உள்ள சில மாற்றங்கள் குறித்து பரிசீலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், ஒரு இன்னிங்ஸில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தபட்டு வந்தது. இதனால், இறுதி ஓவர்களில் கூட பந்துகள் ஸ்விங் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில், குறித்த விதியில் சிறிய மாற்றம் ஒன்றை செய்ய ICC முன்வந்துள்ளது. இனிமேல் 50 ஓவர் போட்டிகளில், 25 ஓவர் வரை 2 புதிய பந்துகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். 25 ஓவர்களுக்கு பிறகு, 2 பந்துகளில் ஏதேனும் ஒரு பந்தை மட்டுமே பயன்படுத்த முடியும். எந்த பந்தை பயன்படுத்தலாம் என்பதை பந்து வீசும் அணியே தேர்வு செய்து கொள்ளலாம் போன்ற விடயங்கள் குறித்து பரிசீலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.