மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன்,த்ரிஷா,சிம்பு,ஜெயம் ரவி,துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தக் லைஃப்'.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்திருந்த நிலையில் தற்போது Post Production பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தக் லைஃப் படக்குழுவினர், இன்று சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.