சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உபாதையினால் விலகிய ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக 17 வயதான ஆயுஷ் மாத்ரே மாற்று வீரராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆயுஷ் மாத்ரே எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து விசாரித்தபோது, இன்று லக்னோவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது கடினம் என தெரியவந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் விளையாடவுள்ளது. அந்தப் போட்டியின்போது மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே CSK அணியுடன் இணைவார் எனவும் கூறப்படுகிறது.