உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறைகள் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.
அதிலும், நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலையில் ஒருசில பழக்கங்களைக் கொண்டிருப்பது மிகவும் நல்லது.
உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கக் கூடியதில் ஒன்று நெய். நெய் வெறும் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிப்பது மட்டுமல்ல, சுடுநீரில் கலந்து குடித்தால் இன்னும் நல்லது.
நெய்யில் DHA மற்றும் CLA போன்ற ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன.இவை செரிமானச் செயல்முறையை மேம்படுத்துவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சுடுநீரில் 1 ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால், செரிமானப் பாதையை மென்மையாக்க உதவி புரிந்து, குடலியக்கம் சீராக நடைபெற ஊக்குவிக்கிறது.
வெறும் வயிற்றில் சுடுநீரில் நெய் கலந்து குடித்து வந்தால், குடலில் உள்ள நச்சுக்கள் சிரமமின்றி வெளியேற்றப்படும்.
காலையில் எழுந்ததும் சுடுநீரில் நெய் கலந்து குடித்து வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்புக்கள் கரைந்து வெளியேறும் மற்றும் உடல் எடையும் குறையும்.
நெய்யில் உள்ள Moisturizing பண்புகள் சருமத்தை நீரேடற்றத்துடனும், உடலினுள்ளே பொலிவாக இருக்கவும் உவுகிறது.
மாணவர்கள் நெய்யை தவறாமல் உட்கொண்டு வந்தால், கற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் மேம்படும். அத்துடன் நெய்யை உட்கொள்வதால், மூட்டுக்களில் ஏற்படும் விறைப்பைக் குறைக்க உதவும்.