இறாலில் புரோட்டீன், விற்றமின் D, கல்சியம், பொற்றாசியம், ஒமேகா 3 என அதிக சத்துகள் நிறைந்துள்ளதால் எந்தவித பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்தாது.
இதனால், இதயத்துக்கு ஆரோக்கியம் மட்டுமே கிடைக்கும். அதனால்தான், உடல் எடை குறைய முயற்சிப்பவர்களும், இந்த இறாலினை கட்டாயம் சாப்பிடுவார்கள். இதற்கு இன்னொரு காரணம் Carbohydrates இறாலில் கிடையாது.
இறாலில் உள்ள இரும்புச்சத்து உடம்பில் உள்ள தசைகளுக்கு நல்லது, அத்துடன் கனிமச்சத்து இறாலில் அதிகம் என்பதால், ஹீமோகுளோபினில் ஒக்சிசன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.
ஞாபக சக்தியை பெருக்கச் செய்யும் இந்த இறாலை உட்கொண்டு வந்தால், மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவும்.
இறாலிலிருக்கும் கனிமங்கள் முடி வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, சருமமும் பொலிவு பெறும். சரும சுருக்கங்களைப் போக்குவதில் மிக முக்கியமான பங்கு இறாலிற்கு உண்டு.
எனவே வாரத்திற்கு ஒருமுறை இந்த இறாலினை உணவில் சேர்த்து உட்கொண்டு ஆரோக்கியத்தினை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.