50 வருடங்கள் வரை இயங்கும் அணுசக்தி Battery ஒன்றை சீன அணுசக்தி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
BV100 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த Battery, ஒரு சிறிய நாணயத்தின் அளவிலேயே உள்ளது. BV100 Battery இல் 2 பகுதிகள் உள்ளது. ஒரு பகுதி கதிரியக்கத்தை உமிழவும், மற்றொரு பகுதி செமிகண்டக்டர் ஆற்றலை உறிஞ்சவும் பயன்படுகிறது.
BV100 Battery இன் மூலம் Smart Phone மற்றும் Cameraவை Charge செய்ய முடியாது. அதிக ஆற்றல் தேவைப்படாத மின்னணுச் சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், விண்வெளியில் கிரகங்களைச் சுற்றிவரும் விண்கலங்கள் , கடலில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் போன்றவற்றில் இதனைப் பயன்படுத்தலாம்.
BV100 Battery சூழலுக்கு உகந்த வகையிலும் உள்ளது. இதில் பயன்படுத்தப்படும் Nickel-63 தாமிரமாக சிதைவதால், பெரும்பாலான இரசாயன Batteryகளை விட மறுசுழற்சி செய்வதற்கு இலகுவானதாக உள்ளது.