இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுமோ.இந்தத் திரைப்படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும், யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தில் மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாக இருந்த இந்தத் திரைப்படம் பல காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது.இதனையடுத்து திரைப்படம் இம்மாதம் 25 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் திரைப்படத்தின் தீம் பாடலை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.