கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பால் சேர்த்து உதடுகளில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர், மிதமான வெந்நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது உதடுகளில் காணப்படும் வெடிப்புகளை நீக்கி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு தேனை உதடுகளில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர், மறுநாள் காலையில் குளிர்மையான நீரால் கழுவி வர, உதடுகளில் காணப்படும் வெடிப்புகள் நீங்கும்.
இரண்டு தேக்கரண்டி நெய்யுடன், ஒரு தேக்கரண்டி சீனியைக் கலந்து உதடுகளில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் உதடுகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது எமது உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ளும்.
இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்னர் தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மறுநாள் காலையில் மிதமான வெந்நீரால் கழுவி வர, உதடுகளில் காணப்படும் வெடிப்புக்கள் மறைந்து உதடுகள் மென்மையாகக் காணப்படும்.
எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு தயிர் மற்றும் சீனி சேர்த்து, நன்கு கலந்து உதட்டில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.