ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.
டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 39 ஓட்டங்கள் பெற்றார்.
குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 204 என்ற வெற்றி இலக்குடன் ஆடிய குஜராத் 19.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மட்டும் இழந்து 204 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 97 ஓட்டங்களைப் பெற்றார் .
இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது பட்லருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத காரணத்தினால், குஜராத் அணியின் தலைவர் சுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுப்மன் கில்லுக்கு போட்டிக் கட்டணத்தில் இந்திய மதிப்பில் ரூ.12 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.