பிரித்தானியாவைச் சேர்ந்த கார் தயாரிக்கும் நிறுவனமான மெக்மர்ட்ரி ஸ்பீர்லிங் (McMurtry Speirling), தலைகீழாக ஓடும் காரை தயாரித்துள்ளது.
இந்த நிறுவனம் தயாரித்துள்ள ஹைபர் மின்சார கார், ஏற்கனேவே பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்துள்ள நிலையில், தற்போது உலகின் முதல் தலை கீழாக ஓடும் கார் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.
டவுன்ஃபோர்ஸ் ஆன் டிமாண்ட் விசிறி எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார் இயக்கப்படுகிறது.
காரின் கீழே ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, அதன் மூலம் வாகனத்தின் சொந்த எடையான 1,000 கிலோவை விட 2 மடங்கு டவுன்ஃபோர்ஸை உருவாக்குகிறது.
இந்தத் தொழில்நுட்பம் கார் தலைகீழாக செல்லும் போதும், அதன் இயக்கத்தைப் பொருட்படுத்தாமல் பிடியை பராமரிக்க அனுமதிக்கிறது. இதற்காக இந்த காரில் 2 சக்திவாய்ந்த விசிறிகள் பயன்படுத்தப்படுகிறது.
100 KW மின்கலத்தைக் கொண்டுள்ள இந்தக் கார், 20 நிமிட அதிவேக பந்தயத்திற்கு போதுமான Charge ஐ வழங்குகிறது.
குறித்தத் தொழில்நுட்பத்தில் 100 கார்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்த நிறுவனம், 2026 ஆம் ஆண்டு இந்த கார்கள் சந்தைக்கு வரும் என அறிவித்துள்ளது.