தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருப்பவர் பிரபுதேவா.30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இவரது நடிப்பில் அண்மையில் 'ஜாலியோ ஜிம்கானா' என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 'மைக்கில் முகோசி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் பிரபு தேவா இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் 'யங் மங் சங்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, லட்சுமி மேனன், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன.
திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் ஒரு சில காரணத்தால் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் 'யங் மங் சங்' திரைப்படத்தின் Release குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்தத் திரைப்படம் 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு எதிர்வரும் May மாதம் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.