நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துகள் அடங்கியுள்ளன. ஆனாலும் நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவைச் சாப்பிடலாம்.
அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
மீன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிகச்சுவையான உணவாகும்.
சாதாக்கெண்டை மீனில் கல்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் உள்ள விற்றமின் A எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
இந்த மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சத்துகள் வளமாக நிறைந்துள்ளன. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சினைகளைத் தடுக்கலாம்.
சாதாக்கெண்டை மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.
மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள்,சாதாக்கெண்டை மீனை சாப்பிட்டால்,நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து இரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.