'மாநகரம்' திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ்.
அதைத் தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி, விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ, கமல்ஹாசனின் விக்ரம் , போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்தை வைத்து 'கூலி' திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.
'கூலி' திரைப்படம் இந்த ஆண்டு August 14 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, 'கூலி' படத்தின் புரமோஷன் பணிகளில் கலந்து கொள்ள உள்ளதால், தற்காலிகமாக சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து விலகுவதாகக் கூறி லோகேஷ் கனகராஜ் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.