TikTok மற்றும் Capcut போன்ற Video Editing செயலிகளைப் போல Edits என்ற செயலியை Meta நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.
இது Instagram இல் Reels பதிவிடுபவர்களுக்கென்று பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Android மற்றும் iOS ஆகிய இரண்டு இயங்கு தளங்களிலும் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பை Meta முதலில் வெளியிட்டது.
இதேபோன்று, YouTube தனது பயனர்களுக்கு, புதிய Video Editing திறன்களை அறிமுகம் செய்தது.
Instagram Edits செயலி மூலம், பயனர்கள் தங்களின் Phone Cameraவினைப் பயன்படுத்தி Video எடுக்கவும், அதனை Watermark இல்லாமல் பதிவிடவும் முடியும்.
மற்ற Video Editing செயலிகளைப் போல, Music ஐ சேர்த்து இதில் Edit செய்ய முடியும். இந்தச் செயலியை பயன்படுத்த Instagram கணக்கு அவசியம்.
Metaவினுடைய இந்த Video Editing செயலி, பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் வழங்குகிறது.