மல்லிகை,கூந்தலில் சூடக் கூடிய பூக்களில் சிறந்தவையாக இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி மருத்துவத்திற்கும் எடுத்துகொள்கிறார்கள்.
மல்லிகையில் தயாரிக்கப்படும் தேநீர். இது மூலிகைகளோடு சேரும் போது சுவையை அதிகரிக்கும். வழக்கமான உணவுக்குப் பிறகு இதைக் குடிக்கும் போது உடல் குளிர்ச்சியை உணரலாம்.
மல்லிகைப் பூக்களை நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால்,குடற்புழுக்கள் வெளியேறும். இதன் போது சுவை எதுவுமே இருக்காது என்றாலும் அப்படியே குடிப்பது நல்லது.
மல்லிகைப் பூவின் மொட்டுகளை மருந்தாக சாப்பிட வேண்டும். இதே மல்லிகை மொட்டுகள் சிறுநீரகம் மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளை நீக்கவும் மருந்தாக பயன்படுகிறது.
மல்லிகைப் பூக்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைப் பனங்கற்கண்டுடன் பருகி வந்தால் கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சி குறைந்து படிப்படியாக பார்வை தெளிவாகக் காணப்படும்.
மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி அதனைப் பொடி செய்து வெந்நீரில் கலந்து தேநீர் போல காய்ச்சிக் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் நீங்கும். நீர் சுருக்கு, நீர் எரிச்சல் போன்றவை சரியாகும்.இந்த மல்லிகைப்பொடி தேநீரை தினமும் குடித்து வந்தால் என்புருக்கி நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் குறையும்.