முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். இனிப்புச் சுவை நிறைந்த மாம்பழத்தில் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.
மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. ஆகவே, தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும்.
மாம்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலம் கழிப்பதை எளிதாக்குகிறது.
ஒரு மாம்பழம் சாப்பிட்டால், இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.
பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது. அத்துடன், கர்ப்பிணிப் பெண்கள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டச்சத்துடன் பிறக்கும்.
சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு.
கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.