தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது கெளதம் தின்னனுரி இயக்கும் 'கிங்டம்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் 12 ஆவது திரைப்படமாகும்.
அனிருத் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படத்தின் Teaser பெரும் வரவேற்பைப் பெற்றது.
அண்மையில் முதல் பாடல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அனிருத் தெரிவித்திருந்தார். அதன்படி, அடுத்த மாதம் 30 ஆம் திகதி வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலின் Promo நாளைய தினம் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.