மசாலா பொருட்களிலேயே அதிகளவு மருத்துவக் குணங்கள் நிறைந்தது மிளகுதான். எனவே நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் பொருளான மிளகு, என்னென்ன மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மிளகு, சருமப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய்களைத் தடுக்கின்றது. மேலும் தலைவலி, ஒற்றைத்தலைவலி, மூக்கடைப்பு இருந்தால் தினமும் காலை, மாலை சாப்பாட்டுக்குப் பிறகு அரை கிராம் மிளகும் ஒரு கிராம் வெல்லமும் சாப்பிட்டு வர குணமாகும்.
மிளகில் anti bacterial அதிக அளவில் இருப்பதால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மிளகில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களான, நார்ச்சத்து, vitamin c மற்றும் K, manganese மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் நிறமிகளின் குறைபாட்டினால் வெண்புள்ளி நோய் உள்ளவர்கள், மிளகை பயன்படுத்துவது நல்லது. மேலும் பல வருடங்களாக, ஆயுர்வேத மருத்துவத்தில் வெண்புள்ளி நோயைக் குணப்படுத்த மிளகு பயன்படுத்தப்பட்டு வருகிறது.