பெண்கள் பலரும் நீளமான கூந்தல் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்காக பலர் ஏராளமான பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் கறிவேப்பிலை எவ்வாறான நன்மைகளைத் தருகின்றது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள்.
வெந்தய இலைகளுடன் சிறிதளவு கறிவேப்பிலை, விதை நீக்கிய நெல்லிக்காய் ஆகியவற்றை மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு அதை தலையில் தடவி, அரை மணி நேரம் காய வைத்து விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
கறிவேப்பிலைச் சாற்றுடன் வெங்காயச்சாறை சேர்த்து நன்றாக அரைத்து அதனை பட்டுத்துணி ஒன்றில் வடிகட்டி, பின்பு உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலைக் கழுவ வேண்டும்.
அரை கப் தயிரை எடுத்து அதில் கறிவேப்பிலைச் சாற்றையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்பு அரைத்த கலவையை தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலைக் கழுவ வேண்டும்.
ஒரு கைப்பிடி கறிவேப்பிலையுடன் 2 அல்லது 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைத்து எடுக்கவும். இந்தக் கலவையை கூந்தலில் தடவி, 1 மணி நேரம் கழித்து கூந்தலைக் கழுவ வேண்டும் .
மேற்குறிப்பிட்டுள்ள செய்முறைகளைப் பின்பற்றி உங்களுடைய கூந்தல் வளர்ச்சியை மேலும் அதிகரித்துக்கொள்ளுங்கள்.