மலையாள இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் பஹத் பாசில் மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லாலுடன் ஷோபனா நடித்த `துடரும்' எனும் மலையாள திரைப்படம் அண்மையில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில்தான் தருண் மூர்த்தியின் அடுத்த திரைப்பட அறிவிப்பை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த திரைப்படத்தில் பஹத் பாசில், நஸ்லென், அர்ஜுன் தாஸ் மற்றும் கணபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.