கற்றாழையின் சதைப் பகுதியை முகம், கழுத்து, கை, கால் பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவி எடுங்கள். அதிகப்படியான வெயிலைத் தாங்கும் வல்லமை கற்றாழைக்கு உண்டு என்பதோடு எரிச்சலையும் தராது என்பதால் சருமத்தை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க இது உதவும்.
வெள்ளரியை அரைத்து சருமம் மற்றும் கழுத்து பகுதியில் Pack போட்டு 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை Rose Water கொண்டு கழுவி வந்தால்,உஷ்ணத்தால் வரும் கட்டிகளைத் தடுக்கலாம்.
உடல் உஷ்ணத்தை தவிர்க்கக்கூடிய இளநீர், கோடையில் சருமத்திற்கும் குளிர்ச்சியைத் தரும். வெயிலில் சென்று திரும்பியதும் சுத்தமான நீரில் முகத்தைக் கழுவிவிடுங்கள். பிறகு சுத்தமான பஞ்சில் இளநீரை நனைத்து முகத்தில் ஒற்றி எடுங்கள். குறைந்தது 15 நிமிடங்கள் இப்படிச் செய்தால், சரும துவாரங்களில் இருக்கும் அழுக்கு வெளியேறும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு சருமத்தில் தயிரைத் தடவி பத்து நிமிடங்களின் பின் குளித்தால் சருமம் வெயிலால் நிறம் மாறாது.
மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி உங்களது சருமத்தை இலகுவாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.