தமிழ் சினிமாவில் ஏராளமான இரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் நடிகர் அஜித்குமார் தற்போது சினிமா மட்டுமின்றி கார் ரேஸிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அவரை கெளரவப்படுத்தும் விதமாக பத்ம பூஷன் விருதை இந்திய அரசு சமீபத்தில் வழங்கி இருந்தது.
இந்தநிலையில் இந்திய ஊடகமொன்றுக்கு அஜித்குமார் வழங்கிய பேட்டியில் அவர் பேசிய விடயங்கள் தற்போது வைரலாகி வருகிறது. குறித்த பேட்டியில் பல விடயங்களைக் தெரிவித்த அஜித்குமார் தனது ஓய்வு குறித்தும் பேசியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் "எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடும் ஒன்றல்ல. நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் எப்போதும் நிகழலாம். நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஏராளமான மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி குறை கூறுகிறார்கள். காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம். எனவே வாழ்க்கையை இரசித்து வாழுங்கள் நான் இங்கு தத்துவம் பேசவில்லை, மனித வாழ்வின் நடைமுறை இயல்பைப் பற்றி பேசுகின்றேன் என்று கூறியிருந்தார்.
இந்த நேர்காணலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அஜித், அரசியலில் நுழைவது அவரவர் தனிப்பட்ட விருப்பு, இந்த முடிவினை எடுக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும் என்று கூறியுள்ளார்.