'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பாண்டிராஜ், அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52 ஆவது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது வென்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில். திரைப்படத்தின் Title Teaser ஐ திரைப்படக் குழு இன்று மாலை வெளியிடவுள்ளது.
இந்தத் திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குநர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் திரைப்படம் இதுவாகும்.
இதனால், இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.