இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'DD Returns' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இத் திரைப்படத்தின் அடுத்த பாகமான 'DD Next Level' உருவாகியுள்ளது.
முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில், இயக்குநர்களான கௌதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் Trailer அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் திரைப்படத்தில் செல்வராகவன் ஹிச்காக் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது Intro பாடலான சினிமாக்காரன் என்ற பாடலை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் ஒரு கானா பாடலாக உருவாகியுள்ளது.
இந்தப்பாடலை தமிழ் ஆதவன் வரிகளில் விக்கி பாடியுள்ளார். இந்தத் திரைப்படம் இம்மாதம் 16ஆம் திகதி வெளியாகவுள்ளது.