கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 1 ஆம் திகதி வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ''Retro''.
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இத்திரைப்படம் முதல் நாளில் உலகளவில் இந்திய மதிப்பில் 46 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
நடிகர் சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய Opening கிடைத்தத் திரைப்படமாக '' Retro '' மாறியுள்ளது.
இந்நிலையில் '' Retro '' திரைப்படம் உலக அளவில் இந்திய மதிப்பில் ரூ.104 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதனை நடிகர் சூர்யாவின் இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.