இதேவேளை சுமார் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர். தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமண நிகழ்ச்சிக்கு ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் ஜோடியாக கைகோர்த்து வந்தனர். ஆரம்பத்தில் ரவி மோகனின் விவாகரத்துக்கு பாடகி கெனிஷாவே காரணம் என சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது இந்த விடயம் உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் "ஒரு வருடமாக, நான் கவசம்போல மௌனத்தை சுமந்து வந்திருக்கிறேன். நான் பலவீனமாக இருந்ததால் அல்ல, என் மகன்கள் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதால். 18 ஆண்டுகளாக காதல், விசுவாசம், பற்றுதலுடன் நான் யாருக்கு துணை நின்றேனோ அவர், என்னைப் பிரிந்து சென்றது மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் உறுதியளித்த பொறுப்புகளையும் துறந்துவிட்டார். இப்போது வங்கியின் அறிவிப்பால், எங்களை எங்கள் இல்லத்திலிருந்து வெளியேற்றும் அபாயகரமான நிலை உருவாகியுள்ளது. நானும் சட்டமும் முடிவு செய்யும் வரை நான் ஆர்த்தி ரவிதான். வழக்கு முடியும் வரை மீடியாக்கள் என்னை 'முன்னாள் மனைவி' என அழைக்க வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.