தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன் (ஜெயம் ரவி).
“ ஜெயம் ” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதற்காக அவருக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதும் , தென்னிந்திய பிலிம்பேர் விருதும் , மூன்று தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகளும் கிடைத்தது.
தனது நீண்ட நாள் காதலியான ஆர்த்தி என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ரவிமோகன்.
சுமார் 15 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்த இந்த தம்பதியினருக்கு அழகான 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ரவிமோகன் மற்றும் ஆர்த்தி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடினர்.
தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.
இவர்களின் விவாகரத்துக்கு ரவியின் தோழியான பாடகி கெனிஷா தான் காரணம் என்று தகவல் வெளியானது.
இதற்கு இருவரும் மறுப்புத் தெரிவித்து, தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் இல்ல திருமண நிகழ்வில் ரவிமோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் கலந்து கொண்டனர்.
இருவரும் ஜோடியாக திருமணத்தில் பங்கேற்றதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து, ஜோடியாக வந்ததைப் பார்த்த பலரும் ரவி மோகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா? என்றும், இருவரும் தங்கள் உறவைச் சொல்லவே இப்படி ஜோடியாக வந்ததாகவும் கூறி வருகின்றனர்.
இதனிடையே, ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் பிரிய இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.