உலகளவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் முன்னணி நிறுவனமான Google, தனது Gemini 2.5 Pro Update ஐ வெளியிட்டுள்ளது.
இது Developer களுக்கு ஒரு முன்னோட்டமாகவும், மேம்பட்ட Coding திறன்களுடன் கூடியதாகவும் காணப்படுகிறது. Coding எழுதுவதில் மற்றும் Web செயலிகளை உருவாக்குவதில் அதன் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Editing Code, Transforming, மற்றும் Building Complex Work flows இப்போது எளிமையாக உள்ளது. இதன் மூலம் Interactive Web Applicationகள் உருவாக்கும் Developers நேரத்தை மிச்சப்படுத்தலாம். மேலும், Video திறனிலும் இது முன்னேற்றம் கண்டுள்ளது.
ஒரு சோதனையில் 84.8% மதிப்பெண்களைப் பெற்று, துறைசார்ந்த முன்னணி AI Modelகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது.
Cursor போன்ற AI குறியீட்டு கருவிகளுடன் இணைந்து வேலை செய்யும் போது தவறுகள் குறைக்கப்படுவதும் இதில் காணப்படும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இப்போது இந்த Update, Gemini API மூலம் Google AI Studio மற்றும் Vertex AI-இல் கிடைக்கிறது. Gemini செயலியில் ஒரே ஒரு Command இல் Coding எழுதவும், செயலிகளை உருவாக்கவும் வசதி உள்ளது.